தமிழகத்தின் திருப்பாச்சேத்தி என்னும் ஊர் நீண்ட காலமாக அரிவாள் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ஒரு ஊர். சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு போர் ஆயுதங்கள் செய்யப்பட்டன. மருது பாண்டியர்கள் சிவகங்கையை ஆண்ட சமயத்தில் வெள்ளையர்களை எதிர்த்து செய்த போரில் பயன்படுத்திய ஈட்டிகள், வீச்சு அரிவாள்கள், வெட்டுக்கத்திகள், பாதுகாப்பு கேடயங்கள் போன்றவை திருப்பாச்சேத்தியில் தான் தயாரிக்கப்பட்டன. திருப்பாச்சேத்தி பகுதியில் சந்தைச்சாலையில் இருக்கும் ஒரு அரிவாள் செய்யும் பட்டறையில் அரிவாள் செய்யப்படுவதை இந்த விழியப் பதிவில் காண்போம்.
https://youtu.be/pZ7PKTqb6gA
No comments:
Post a Comment